“நான் உன் அக்கா!” – போதையில் இருந்த தம்பி கேட்கவே இல்லை… அக்காவையே வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம்..!!
SeithiSolai Tamil October 28, 2025 02:48 AM

விழுப்புரம் மாவட்டம் வானூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதுடைய வாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வாணி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து தனது இரண்டு மகன்களுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய் காலமான பிறகு, வாணிக்கு அச்சரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 42 வயதுடைய சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமண பந்தத்தை மீறி நெருங்கிப் பழகி, ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வாணியின் தம்பி 29 வயதுடைய சேட்டு, குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்திருக்கிறார். இதனால் அவருக்குத் திருமணம் செய்துவைத்தால் திருந்துவார் என வாணி எண்ணியுள்ளார். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் குடிப்பழக்கத்தைக் கைவிடாத சேட்டு, தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனால் சேட்டுவின் மனைவி அவரைப் பிரிந்து தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். சில நாட்களுக்கு முன்பு தனது அக்காவிற்குத் தொலைபேசி மூலம் அழைத்த சேட்டு, “இங்கு எனக்குச் சமைத்துப் போடக்கூட யாரும் இல்லாமல் கஷ்டப்படுகிறேன்” எனப் புலம்பியுள்ளார்.

தம்பியின் நிலையைக் கண்டு வாணி மனமுடைந்து, அவரைச் சந்திக்க நேரில் சென்றுள்ளார். அங்கு முழு போதையில் இருந்த சேட்டுவுக்கு வாணி அறிவுரை கூறிவிட்டுச் சமைப்பதற்காக சமையலறைக்குச் சென்றுள்ளார். அப்போது போதையில் இருந்த சேட்டு தனது அக்காவைப் பின் தொடர்ந்து சென்று தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனை எதிர்த்த வாணி, “நான் உன் அக்கா” எனக் கண்டித்துள்ளார். ஆனால், எதையும் காதில் வாங்காத சேட்டு, அங்கிருந்த சேலையை எடுத்து வாணியின் கைகால்களைக் கட்டிப் போட்டு அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார்.

தப்பியோடி வந்த வாணி, இந்த கொடூர சம்பவம் குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், உடனடியாக சேட்டைக் கைது செய்தனர். பிறந்த சகோதரியையே தம்பி பாலியல் வன்கொடுமை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.