சூரசம்ஹாரம்... திருச்செந்தூருக்கு முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம்!
Dinamaalai October 27, 2025 11:48 PM

இன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு லட்சக்கணக்கில் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக தென் ரயில்வே சார்பில் திருச்செந்தூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த ரயில் சேவை மூலம் பக்தர்கள் எளிதில் திருச்செந்தூருக்கு வந்து செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, திருச்செந்தூரில் சென்னையில் இருந்து நேற்றிரவு 9 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில், இரவு 10.30 மணிக்கு நெல்லையை வந்தடைந்தது. நெல்லையில் இருந்து இன்றிரவு 11 மணிக்கு புறப்பட்ட ரயில், இரவு 12.30 மணிக்கு திருச்செந்தூரை அடைந்தது. 

அதே போன்று நெல்லை - திருச்செந்தூருக்கு இன்றும் பகல் நேரத்தில் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை உள்ளிட்ட நிலையங்களில் நிறுத்தம் பெறும். சூரசம்ஹார விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு வரவிருக்கும் பக்தர்களுக்கு இந்த ரயில் சேவை பெரும் வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.