ராமநாதபுரம் மாவட்டம் ஓம் சக்தி நகரைச் சேர்ந்த தீபன்குமார் (30) கத்தாரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கே பணியாற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் அர்ஷா (28) உடன் தீபன்குமார் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலில் இருந்தார். இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

தீபன்குமார் தனது சொந்த ஊரில் தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு அர்ஷா சம்மதம் தெரிவித்ததையடுத்து, இருவரின் திருமணம் ராமநாதபுரத்தில் தமிழ் பாரம்பரிய முறையில் நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க தீபன்குமார், அர்ஷாவின் கழுத்தில் தாலி கட்டி காலில் மெட்டி அணிவித்தார்.

திருமணத்திற்குப் பின் இருவரும் கூறியதாவது, “எங்களது திருமணம் தமிழ் கலாசார முறைப்படி நடந்தது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பெற்றோர் ஆசீர்வாதத்துடன் இது நிறைவேறியது. விரைவில் மீண்டும் கத்தாருக்கு திரும்பி பணியில் சேர உள்ளோம்” என தெரிவித்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!