ப்ரோ கோட் பெயரைப் பயன்படுத்த ரவி மோகனுக்கு தடை – டெல்லி உயர் நீதிமன்றம்
TV9 Tamil News October 28, 2025 06:48 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan). இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்த நடிகர் ரவி மோகன் தற்போது சினிமாவில் புது அவதாரங்களை எடுத்துள்ளார். அதன்படி தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் புது அவதாரம் எடுத்து படங்களை தயாரிக்கவும் படங்களை இயக்குவது குறித்தும் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிட்டனர். அதன்படி நடிகர் ரவி மோகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். பிரபலங்கள் பலர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரவிமோகனின் புதிய பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இவரது ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்க உள்ள படங்கள் குறித்த அப்டேட்டும் தொடர்ந்து வெளியானது.

அதன்படி நடிகர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக ரவி மோகன் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். நடிகர் யோகி பாபு முன்னணி வேடத்தில் நடிக்கும் அந்தப் படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியானது. அதன்படி அன் ஆர்டினரி மேன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப் படத்தின் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் ப்ரோ கோட் என்ற படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ரவி மோகன் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா மற்றும் அர்ஜுன் அசோகன் ஆகியோர் முன்னணி வேடத்தில் நடிக்கின்றனர்.

ப்ரோ கோட் பெயரைப் பயன்படுத்த ரவி மோகனுக்கு தடை:

இந்த நிலையில் இந்த ப்ரோ கோட் பெயரை படத்திற்கு பயன்படுத்த கூடாது என்று ப்ரோ கோட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள மதுபான நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கு தொடர்ந்து இருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ப்ரோ கோட் பெயரைப் பயனப்டுத்த ரவி மோகனுக்கு எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து ப்ரோ கோட் மதுபான நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்த நிலையில் தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் ப்ரோ கோட் என்ற பெயரைப் ரவி மோகனின் படத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.

Also Read… ஹேப்பி நியூஸ் சொன்ன சமந்தா… உற்சாகத்தில் ரசிகர்கள்

ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோ வீடியோ:

A Code for every Bro’s🤜🤛

Presenting the Speak Eazy Tamil promo of @RaviMohanStudio’s Production No.1 #BroCode starring @iam_RaviMohan @iam_SJSuryah & #ArjunAshokan. Enjoy the hilarious promo with your Bro Code mates😉😄

Watch🔗https://t.co/iUbRl2l2cp

Written & Directed by… pic.twitter.com/EVLYscQOWZ

— Ravi Mohan Studios (@RaviMohanStudio)

Also Read… 10 நாட்களில் உலக அளவில் பைசன் படம் வசூலித்தது எவ்வளவு? அப்டேட் இதோ

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.