அரசியல் ஆதாயம் தேடும் திமுக...அதிமுக கடும் குற்றச்சாட்டு!
Seithipunal Tamil October 29, 2025 04:48 AM

எதற்கு எடுத்தாலும் மதத்தின் பெயரால் பொய் பிரச்சாரம் செய்து மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேடும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன்னிலை மறந்து மீண்டும் மதரீதியாக மக்களை பிரிக்கும் அற்ப அரசியலை கையில் எடுத்துள்ளார் என்று புதுச்சேரி  மாநில அதிமுக  செயலாளர் திரு.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி  மாநில அதிமுக  செயலாளர் திரு.அன்பழகன் அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தற்போது உள்ள வாக்காளர் பட்டியல் குறைபாடுகள் இருப்பதால் வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என கழக பொதுச்செயலாளர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வந்தார்.

இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்காமல் போலி வாக்காளர் நீக்கம் குறித்து அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இதை அதிமுக தலைமை வரவேற்றுள்ளது அதனை பின்பற்றி புதுச்சேரியில் நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை புதுச்சேரி அதிமுக வரவேற்கிறது.

எதற்கு எடுத்தாலும் மதத்தின் பெயரால் பொய் பிரச்சாரம் செய்து மக்களை பிரித்து அரசியல் ஆதாயம் தேடும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் தன்னிலை மறந்து மீண்டும் மதரீதியாக மக்களை பிரிக்கும் அற்ப அரசியலை கையில் எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.