நவ.2ம் தேதி அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்- ஈபிஎஸ்
Top Tamil News October 29, 2025 04:48 AM

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில், பூத் கமிட்டி அமைக்க நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 2.11.2025 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணிக்கு, பூத் (பாகம்) கிளைக் கழகங்களை அமைப்பதற்காக, கழக அமைப்பு ரீதியான மாவட்டங்கள் வாரியாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்” திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.