நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்ட நிலையில், மதுரையில் இருந்து துபாய் கிளம்பி சென்றுக் கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் 167 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 173 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்டு சில மணி நேரத்தில், நடுவானில் பறந்துக் கொட்னிருந்த போதே இயந்திர கோளாறு ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது.

உடனே விமானி மதுரை மற்றும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு நிலைமையை தெரிவித்தார். அப்போது விமானம் சென்னை வான்வெளியில் இருந்ததால், சென்னையில் அவசரமாக தரையிறங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதன்படி, விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர், விமானம் நடைமேடைக்கு கொண்டு செல்லப்பட்டு பொறியாளர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.

இயந்திர கோளாறு சீர்செய்வதற்காக நீண்ட நேரம் பிடித்ததால், பயணிகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. சுமார் 8 மணி நேரத்திற்கு பிறகு கோளாறு சரிசெய்யப்பட்டு, அதே விமானம் இரவு நேரத்தில் 173 பயணிகளுடன் துபாய் நோக்கி புறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?