விபத்தில் இருந்து காப்பாற்றிய இளைஞர் மீது 'பாலியல் துன்புறுத்தல்' புகார்! நெட்டிசன்களை உலுக்கிய வைரல் வீடியோ..!!!
SeithiSolai Tamil October 31, 2025 02:48 AM

அடையாளம் தெரியாத வெளிநாட்டு நகரம் ஒன்றில், வேகமாக வந்த காரில் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றிய இளைஞர் மீது, அப்பெண்ணே பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி, பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

வைரலான அந்தக் காணொளியில், பெண் ஒருவர் சாலையில் நடந்து செல்லும்போது, தன் கைபேசியை பார்த்தபடியும், ஹெட்ஃபோன் அணிந்தபடியும் இருந்தார். அவர் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக கார் ஒன்று நெருங்கியது.

எதிர்த் திசையில் நடந்து வந்த இளைஞர் ஒருவர், கார் வருவதைக் கவனித்து, பாய்த்துச் சென்று அப்பெண்ணை விலக்கி இழுத்து, காரின் பாதையில் இருந்து மயிரிழையில் காப்பாற்றினார். இதில், அவர் அப்பெண்ணை கைகளால் அணைத்து இருவரும் உருண்டு விழுந்து, பெரும் விபத்தில் இருந்து தப்பினர். அதிர்ச்சியடைந்த அப்பெண், பின்னர் அந்த இளைஞர் மீது ‘அத்துமீறிய உடல் தொடர்பு’ புகார் அளித்ததாகவும், அதன் விளைவாக அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் ஆன்லைனில் தகவல்கள் பரவி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by RCIC – Immigration – Lawyer – Notary – Visa (@goldenpathwayimmigration)

“>

இந்தச் சம்பவத்தை அறிந்த நெட்டிசன்கள் பலரும் நம்ப முடியாமல் திகைத்துள்ளனர். “அடுத்த முறை அவளைத் காரில் தள்ளிவிடுங்கள்” என்று ஒருவர் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்தார். மற்றொருவர், “சாலைகளில் இப்படிப் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் பெண் தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறினார். “உங்களுடைய நல்ல செயலுக்கு தண்டனை கிடைக்கும் ஒரு சமூகத்தில் வாழும்போது, மற்றவர்களுக்கு உதவுவதைத் தவிர்த்துவிடுங்கள்” என்றும் பலர் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், நெருக்கடியான தருணங்களில் ‘சம்மதம்’, ‘வீர செயல்’ மற்றும் எதிர்பாராத விளைவுகள் குறித்த விவாதத்தை இந்தக் காணொளி கிளப்பியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.