தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
TV9 Tamil News October 31, 2025 02:48 AM

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் (Actor Vijay). இவரது நடிப்பில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் மகன் விஜயின் கதாப்பாத்திரத்தை டீ ஏஜிங் பயன்படுத்தி காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கும் 69-வது படம் தான் அவர் நடிக்கும் இறுதிப் படம் என்று அறிவித்தனர். இது ரசிகர்களிடையே மிகுந்த வேதனை அளித்தாலும் விஜயின் நடிப்பில் இறுதியாக உருவாகும் படத்தினை இயக்க உள்ளது யார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இவர் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் பாபி தியோல் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க பலர் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

நவம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள்:

அதன்படி இந்த ஜன நாயகன் படம் வருகின்ற 9-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று முன்னதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் நிலையில் படத்தின் முதல் சிங்கிள் எப்போது ரிலீஸாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதன்படி வருகின்ற நவம்பர் மதம் முதல் வாரம் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Also Read… ஜெயிலர் 2 படத்தின் மூலம் காமெடியில் ரீ என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

32.4M+ cumulative digital views in 24 hours 🔥

Highest viewed glimpse in Kollywood in 24 hours 💥#HBDThalapathyVijay #JanaNayaganTheFirstRoar ▶️ https://t.co/Q981uzk8jA#JanaNayagan#Thalapathy @actorvijay sir #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju… pic.twitter.com/SGYPVIoH0T

— KVN Productions (@KvnProductions)

Also Read… லோகா முதல் மதுரம் ஜீவாமிருதபிந்து வரை… இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மலையாளப் படங்கள்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.