 
            தெலுங்கு சினிமாவின் மாஸ் மன்னன் ரவி தேஜா, கவர்ச்சிகரமான ஸ்ரீலீலா ஜோடியாக நடித்திருக்கும் எதிர்பார்ப்புகள் மிக்க படம் மாஸ் ஜதாரா வருகிற அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் அதிரடியாக வெளியாகிறது. பிரபல எழுத்தாளர் பானு போகவரபு இயக்கத்தில் உருவான இப்படத்தில் நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட ப்ரீ ரிலீஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூர்யா கலந்துகொண்டார். அவர் உரையாற்றிய பேச்சு ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
மேலும், சூர்யா உரையில், “ரவி தேஜாவின் ரசிகனாக இருக்கும் எனக்கு இது பெருமையான தருணம். அவரது படங்களுக்கு தமிழில் எப்போதும் வெற்றிகரமான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
குறிப்பாக விக்ரமகுடு ரீமேக் ‘சிறுத்தை’ கார்த்தியின் கேரியரில் ஒரு மிகப்பெரிய மைல் ஸ்டோன்! மாஸ் ஜதாரா பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் ஆகும் என நம்புகிறேன். இயக்குனர் பானுவின் கனவு நனவாகட்டும்” என்று உற்சாகமாக தெரிவித்தார்.இப்போது ரசிகர்கள் “மாஸ் ஜதாரா” ரிலீசுக்கு கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டனர்.