ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஒலிவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் சொத்து ஆவணப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு, பொதுமக்களிடமிருந்து கூடுதல் முன்பதிவு வில்லைகள் (tokens) வழங்குமாறு கோரிக்கைகள் வந்துள்ளன,” என்று கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, ஒரு சார்பதிவாளர் பணிபுரியும் அலுவலகங்களுக்கு வழக்கமான 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 டோக்கன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆவணப் பதிவு அதிகம் நடைபெறும் 100 முக்கிய அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும், அதோடு ஏற்கனவே வழங்கப்பட்ட 12 தட்கல் (tatkal) டோக்கன்களுக்கு மேலாக 4 கூடுதல் தட்கல் டோக்கன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு இவ்வாறு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தினேஷ் பொன்ராஜ் ஒலிவர் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?