5 ஆண்டு அவகாசம் தாருங்கள்.. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அடுத்த முறை எனக்கு ஓட்டு வேண்டாம்: தேஜஸ்வி யாதவ்..!
Webdunia Tamil November 03, 2025 06:48 PM

பிகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், 'மகாகாத்பந்தன்' கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், ஃபேஸ்புக் நேரலையில் இளைஞர்களை கவரும் வகையில் பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசுகையில், "பிகார் இளைஞர்களே, உங்களின் வாழ்க்கையில் ஒரேயொருமுறையாவது மகாகாத்பந்தன் கூட்டணிக்கு வாக்களியுங்கள்" என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். வேலை வாய்ப்புகள், சிறந்த எதிர்காலம் மற்றும் மாநில வளர்ச்சிக்காக வாக்களிக்குமாறு வலியுறுத்தினார்.

தேஜஸ்வி யாதவ் மேலும் கூறுகையில், தனக்கு நீண்ட கால அவகாசம் தேவையில்லை என்றும், "உங்களின் பேராதரவு எனக்கு வெறும் ஐந்தாண்டுகளுக்கு மட்டும் போதும்" என்றும் குறிப்பிட்டார். "நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால், எனக்கு அதன்பின் வாக்கு செலுத்த வேண்டாம்" என்று சவால் விடுத்தது அவரது பிரச்சாரத்தின் சிறப்பம்சமாக இருந்தது. இந்தப் புதிய டிஜிட்டல் உத்தி இளைஞர்களை கவர்ந்துள்ளது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.