இந்திய மகளிர் அணி தங்களது முதல் உலகக் கோப்பையை வென்றுள்ள சூழலில் சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை கிரிக்கெட் லெஜண்ட்ஸ் தங்கள் பெருமிதத்தையும் பூரிப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
World Cup வென்ற இந்தியப் பெண்கள்நேற்று (நவம்பர் 2) நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வென்றது இந்திய அணி. இந்திய ஆல் ரவுண்டர்கள் ஷெஃபாலி வெர்மா மற்றும் தீப்தி சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதனால் ஆஸ்திரேலியா (7), இங்கிலாந்து (4), நியூசிலாந்தைத் (1) தொடர்ந்து உலகக் கோப்பை வெல்லும் நான்காவது அணியாக உருவாகியிருக்கிறது.
இந்திய மகளிர் அணிக்கு அதன் 1983 தருணம் வந்துவிட்டதாகப் பலரும் பூரிப்படைந்துள்ளனர். இரண்டு உலகக் கோப்பைகளை வென்ற இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி சமூக வலைதளங்களில் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்தார்.
பெருமிதம் கொள்ளும் லெஜண்ட்ஸ்எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டப் பதிவில், "வரும் தலைமுறைக்கு ஓர் உத்வேகம், உங்கள் அச்சமில்லாத கிரிக்கெட் மற்றும் நம்பிக்கையினால் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைபட வைத்திருக்கின்றீர்கள். நீங்கள் எல்லாவற்றுக்கும் தகுதியானவர்கள், இந்த தருணத்தை முழுமையாக அனுபவியுங்கள். சபாஷ் ஹர்மன் மற்றும் டீம். ஜெய் ஹிந்த்" என வாழ்த்தியுள்ளார்.
2011ஆம் உலகக் கோப்பை வென்ற இந்திய லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர், "1983 (இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்ற ஆண்டு) ஒரு முழு தலைமுறையையும் பெரிய கனவுகளைக் காணவும், அந்தக் கனவுகளைத் துரத்தவும் தூண்டியது. இன்று நம் பெண்கள் அணி உண்மையாகவே சிறப்பான ஒன்றை செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் எண்ணற்ற இளம் பெண்கள் பேட்டையும் பந்தையும் எடுக்க, களத்தில் இறங்கி நாமும் அந்த கோப்பையைத் தூக்க முடியும் என நம்பிக்கைக்கொள்ள ஊக்கப்படுத்தியிருக்கின்றனர். இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு முக்கியமான தருணம். இந்திய அணி சிறப்பாக செய்துள்ளது. மொத்த நாட்டையும் பெருமைபடுத்தியிருக்கிறது." எனப் பெருமிதம் கொண்டார்.
மேலும் பல கிரிக்கெட்டர்கள் இந்திய மகளிர் அணியை வாழ்த்தியுள்ளனர்.
View this post on InstagramA post shared by Mithali Raj (@mithaliraj)