'Stranger” உடன் உறவு கொள்ள வேண்டும் என வினோதமான ஆசை எதிரொலி...கொலை வர சென்ற கொடூரம்..!
Top Tamil News November 04, 2025 09:48 AM

கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண்மணி ப்ரீத்தி. இவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் இவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால் அவரின் வாழ்வே ஒரு முடிவுக்கு வரும் என்று அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஆம்.. யாரென்று தெரியாத ‘Stranger” உடன் உறவு கொள்ள வேண்டும் என வினோதமான ஆசை எழுந்துள்ளது பிரீத்திக்கு. அதற்காக அவர் பேஸ்புக் -ல் புனித் என்ற இளைஞருடன் பேச ஆரம்பித்துள்ளார். பேச ஆரம்பித்த சில நாட்களிலே அவர்கள் போனில் பேசி நேரில் சந்திக்க முடிவு எடுத்துள்ளனர். 

ஒருநாள் தந்து ப்ரீத்தியை ஒரு வாடகைக் காரில் அழைத்துச்சென்று, மைசூரில் சில இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் கிருஷ்ண ராஜா சாகர் அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர், அங்கு இருவரும் உடலுறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 

இதற்குப் பிறகு, இவர்கள் இருவரும் அவரவர் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால் ப்ரீத்தி அதற்கு பிறகும் அந்த உறவை தொடர விருப்பம் காட்டியுள்ளார். ஆனால் புனித் தயங்கியுள்ளார். இருவரும் கே.ஆர். பேட்டை நோக்கிச் சென்றபோது, ப்ரீதி மீண்டும் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புனித், கட்டேரகட்டா என்ற காட்டுப்பகுதிக்குள் காரை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது இந்த மாதிரியான காட்டு பகுதியில் உறவுகொள்ள வேண்டும் என புனித் -ஐ வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.  அங்கு இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதில் ஆத்திரமடைந்த புனித் ப்ரீத்தியின் தலையில் அடித்துள்ளார். பின்னர் ஒரு கல்லை அவர் தலையில் போட்டு அவரை கொன்றுள்ளார்.பின்னர் அவர் உடலை தனது கிராமமான கரோட்டி கிராமத்திற்கு கொண்டு சென்று, தனது நிலத்தில் புதைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம், மனைவியை காணவில்லை என ப்ரீத்தியின் கணவர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்த பின்னரே தெரிய வந்துள்ளது.இம்மாதிரியான அதீதமான மன நிலைக்கு மருத்துவத்தில் கட்டாய பாலியல் நடத்தை Compulsive Sexual Behavior Disorder (CSBD) என்ற பெயரும் உண்டு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.