தமிழகத்தில் தொடர்ந்து 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
Dinamaalai November 04, 2025 04:48 PM

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதியில் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதியில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. இந்த தாழ்வு நிலை அடுத்த சில நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்தமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

இதன் தாக்கத்தால், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை அதிகம் பெய்யக்கூடிய பகுதிகள் குறித்து விரிவான தகவலை அடுத்த சில நாட்களில் வெளியிடவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மாறுபாடுகளை கருத்தில் கொண்டு, கடலோர பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.