ஒரு பருவத்தில் இருந்து மற்றொரு பருவ மாற்றத்தின்போதோ (Climate Change) அல்லது வானிலை மாற்றங்களின்போதோ வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தில் மாற்றங்கள் ஏற்படும். இந்த நேரத்தில், பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் எளிதாக காதுக்குள் பரவி வேகமாகப் பெருகி, தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இதனை தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் (Fever) அல்லது மூக்கடைப்பு ஆகியவை காதுக்குள் அழுத்தத்தை ஏற்படுத்தி பிரச்சனையை தரும். மேலும், இது காதில் கனத்தன்மை அல்லது வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் ஆரம்ப அறிகுறிகளாக காது வலி, லேசான காது கேளாமை மற்றும் சில நேரங்களில் லேசான நீர் வெளியேற்றம் ஆகியவை ஏற்பட தொடங்கும். இந்தப் பிரச்சனை குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு மிக வேகமாக ஏற்பட தொடங்கும். நீங்கள் தொடர்ச்சியாக காது வலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்சனையை சந்தித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம். இல்லையெனில், நாளடைவில் பிரச்சனை மோசமடையக்கூடும்.
ALSO READ: மழைக்காலத்தில் குழந்தைகள் நோய்வாய்ப்படும் அபாயம்.. தடுப்பது எப்படி..?
என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும்..?வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் சில நேரங்களில் காதுகளில் காது மெழுகு படிதல், காது அடைப்பு, அழுத்த மாற்றங்கள் மற்றும் காது மந்தம் போன்றவற்றை ஏற்படுத்தும். சில நேரங்களில் இவை அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் சைனஸ் மற்றும் தொண்டை தொற்றுகளும் அதிகரிக்கும், இது காதுகளைப் பாதிக்க செய்யலாம். குளிர்ந்த காற்று உங்கள் காதுகளை நேரடியாக தொடும் போது எரிச்சலை அதிகரிக்கும். இதனால், தொற்று விரைவாகப் பரவக்கூடும்.
வெப்பநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களிலிருந்து காதுகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம். குளிர்ந்த காற்றை நேரடியாக வெளிப்படுத்துவதைத் தவிர்க்கவும், பைக் ஓட்டும்போது உங்கள் காதுகளை மூடவும். சளி மற்றும் இருமலை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஏனெனில், இவை பெரும்பாலும் காது தொற்றுகளை அதிகரிக்கின்றன. உங்கள் காதுகளை அதிகமாக குடைவதை தவிர்க்கவும். அதேபோல், குளிர்ந்த காற்றில் இருந்து தப்பிக்க காதுகளில் பஞ்சு வைக்கும்போது அழுத்தி ஆழமாக வைக்க வேண்டாம், ஏனெனில் இது வலியை அதிகரிக்கும்.
ALSO READ: நீண்ட நாட்களாக ஒரே டூத் பிரஷ்..? ஏன் உடனடியாக மாற்றவது முக்கியம்..?
காதுகளில் இப்படி கவனம் செலுத்துங்கள்: