சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இரண்டு மூதாட்டிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டு, கல்குவாரி தண்ணீர் குட்டையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூதனூர் பகுதியைச் சேர்ந்த பாவாயி (70) விவசாய கூலி தொழிலாளி; அதே பகுதிகளைச் சேர்ந்த பெரியம்மாள் (75) ஆடுகள் வளர்த்து வாழ்ந்து வந்தவர். இ இருவரும் நேற்று காலை வீடுகளை விட்டு வெளியேறிய பின்னர் இரவு வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் காணவில்லை. குடும்பத்தினரின் புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை ஆரம்பித்தனர்.

இந்நிலையில், தூதனூர் பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான பழைய கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் இருவரின் உடல்கள் மிதந்து கிடப்பதை உள்ளூர் மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மூதாட்டிகள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால், நகைக்காகவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதை நடத்திய மர்ம நபர்கள் கொலை செய்து உடலை தண்ணீர் குட்டையில் வீசியிருக்க வாய்ப்பு அதிகம் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றம் நடந்த பகுதிக்கு போலீசார் சென்று தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொலைக்கு காரணமானவர்கள் யார், அவர்கள் எந்த வழியில் தப்பினர் என்ற கோணத்தில் சிசிடிவி ஆதாரங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன.
இந்த இரட்டை கொலை சம்பவம் தூதனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?