பொதுமக்களே உஷார்.... நாடு முழுவதும் அதிகரிக்கும் டிஜிட்டல் மோசடி!
Dinamaalai November 05, 2025 03:48 AM

 

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் ‘டிஜிட்டல் கைது’ மோசடிகள் பெருநகரங்களில் வாழும் மக்களை அதிகளவில் குறிவைத்து நடைபெறுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் தடுப்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்திய சைபர் குற்றவியல் ஒருங்கிணைப்பு மையம் மேற்கொண்ட ஆய்வில், இம்மோசடி பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவின்படி, நாட்டில் பதிவாகும் மொத்த ‘டிஜிட்டல் கைது’ வழக்குகளில் 66 சதவீதம் பெங்களூரு, ஐதராபாத், டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் நடந்துள்ளன. இதனைத் தொடர்ந்து மும்பை, சூரத், புனே போன்ற நகரங்களிலும் அடிக்கடி இத்தகைய வழக்குகள் பதிவாகின்றன. மேலும், மோசடியில் சிக்கும் நபர்களில் 76 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும், பெரும்பாலும் வேலைவாய்ப்பில் உள்ளவர்கள் மற்றும் சேமிப்பு கொண்டவர்களே குறிவைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மோசடிக் கும்பல்கள் பெரும்பாலும் டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் தொடர்பு கொண்டு தங்களை காவல்துறை, சி.பி.ஐ., போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அல்லது ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என அறிமுகப்படுத்துகின்றனர். பின்னர், “உங்கள் மீது வழக்கு உள்ளது” அல்லது “உங்களைக் கைது செய்யப் போகிறோம்” என்று மிரட்டி மக்களிடமிருந்து வங்கிக் கணக்குகள் வழியாக பணம் பறிக்கின்றனர். நாடு தழுவிய பிரச்சினையாக மாறியுள்ள இந்த மோசடி குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.