தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் ஒரு நெகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ (GBU) திரைப்படம் வசூலில் பெரும் வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64வது படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான், அஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் செய்த ஒரு பாராட்டத்தக்க செயல் குறித்த தகவல் கசிந்துள்ளது.
நடிகர் அஜித், கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை கேளம்பாக்கம் கண்டிகை பகுதியில், தனது வீட்டில் பணிபுரியும் சமையல்காரர், ஓட்டுநர், தோட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 12 பேருக்குத் தனித்தனியாக வீடு கட்டிக் கொடுத்துள்ளார்.
ஒவ்வொரு வீடும் 1500 சதுர அடியில் மிக நேர்த்தியாகக் கட்டித் தரப்பட்டுள்ளதாம். மேலும், அந்தப் பகுதிக்கு அஜித் அவென்யூ (Ajith Avenue) என்றே பெயரிடப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. தனது ஊழியர்களுக்கு நடிகர் அஜித் செய்த இந்த மிகப்பெரிய உதவி, அவருடைய பெருந்தன்மையையும், சமூக அக்கறையையும் காட்டுவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டி வருகின்றனர்.