க்ரைம் த்ரில்லர் பிடிக்கும்னா அஞ்சாம் பாத்திரா படத்தை மிஸ் செய்யாதீர்கள்
TV9 Tamil News November 05, 2025 05:48 AM

மலையாள சினிமாவில் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி 2020-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் அஞ்சாம் பாத்திரா. க்ரைம் திர்ல்லர் பாணியில் வெளியாகி இருந்த இந்தப் படத்தை மிதுன் மானுவல் தாமஸ் எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் குஞ்சாக்கோ போபன், ஜினு ஜோசப், உன்னிமய பிரசாத், ஸ்ரீநாத் பாசி, அபிராம் ராதாகிருஷ்ணன், ஹரிகிருஷ்ணன், ஷரஃப் யு தீன், மேத்யூ தாமஸ், நிகிலா விமல், நந்தன வர்மா, திவ்யா கோபிநாத், இந்திரன், ரம்யா நம்பீசன், அர்ஜுன் நந்தகுமார், அருண் செருகாவில், ஜாபர் இடுக்கி, ஜெய்ஸ் ஜோஸ், அசிம் ஜமால், கிலு ஜோசப், சாதிக், சுதீஷ், ஷாஜு ஸ்ரீதர், போபன் சாமுவேல், திலீஷ் நாயர், பிரியநந்தன், நஸ்ரீன் நாசர், சுதீர் சுஃபி, ராஜன் பூத்திரக்கல், ஆமினா நிஜாம், வினீத் வாசுதேவன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமனான ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேனுவல் மூவி மேக்கர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆஷிக் உஸ்மான் தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்கலிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அஞ்சாம் பாத்திரா படத்தின் கதை என்ன?

கேரளாவில் ஒரு பகுதியில் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். அவர்களை கொலை செய்யும் கொலையாளி அந்த இடத்தில் ஒரு நீதி தேவதையின் சிலையை வைத்துவிட்டு செல்கிறார். இப்படி தொடர்ந்து காவல் துறையிலேயே கொலைகள் நடைப்பெற்று வருவதைப் பார்த்து மொத்த அரசாங்கமே அதிர்ந்து இருக்கும்.

Also Read… அல்லு அர்ஜுன் படத்திற்கு சாய் அபயங்கர் தான் இசையமைப்பாளரா? வைரலாகும் பதிவு

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிக்க கிரிம்னாலிஸ்டாக இருக்கும் குஞ்சக்க போபன் இருக்கிறார். இவர் அதனை தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில் கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஒரு நேரத்தில் ஒரே கவல்நிலையத்தில் பணியாற்றியவர்கள் என்பது தெரிகிறது. இதனைத் தொடர்ந்து எப்படி அந்த கொலையாளியை கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… லாங் ட்ரைவ் போலாமா மாமாகுட்டி… லவ் டுடே வெளியாகி 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.