செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சி உலக வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐ.டி. மற்றும் தொழில்நுட்ப துறையில், செலவுக் குறைப்பு மற்றும் தன்னியக்க முறைமைகள் காரணமாக நிறுவனங்கள் பெருமளவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன.
அந்நிலையில், உலகம் முழுவதும் இந்த ஆண்டு இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள் ஏ.ஐ. தானியக்க மாற்றத்தால் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘லே-ஆஃப்’ எனும் உலக வணிக மற்றும் வேலைவாய்ப்பு கண்காணிப்பு தளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தம் 218 சர்வதேச நிறுவனங்கள் 1,12,732 பேரை பணிநீக்கம் செய்துள்ளன.

இதில் அமேசான் மட்டுமே 30,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் சில்லறை தொழில்நுட்பம், மென்பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை, தரவு பகுப்பாய்வு உள்ளிட்ட துறைகளில் அவசரமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
நிறுவனங்கள் ஏ.ஐ.யை பயன்படுத்தி உற்பத்தித் திறன், செயல்திறன், லாப விகிதம் ஆகியவற்றை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு வருவது வேலை சந்தையில் எதிர்மறை தாக்கத்தை உண்டு படுத்தியுள்ளது.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி புதிய வேலைகளையும் உருவாக்கினாலும் பாரம்பரிய பணியிடங்களின் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியாக மாறி வருவதாக தொழில்துறை வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். மேலும் எதிர்காலத்தில் தானியக்கம் மேலும் வலுவடைவதால், உயர் திறன் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப மறுபயிற்சி அவசியமாகும் என்று கூறப்படுகிறது.
உலகளவில் வேலைவாய்ப்பு சூழ்நிலை சற்று பதட்டமாக மாறி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட வளர்கிற நாடுகளில் ஐ.டி. துறையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் இந்த மாற்றம் பெரும் சவாலாக உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?