பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்து பெண் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, வயதான நபருடன் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த பெண் மீட்கப்பட்டுள்ளார்.
கராச்சியின் மிர்புகாஸ் மாவட்டத்தை சேர்ந்த சுனிதா குமாரி என்ற இளம்பெண், கடந்த ஜூலை மாதம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் அவர் இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றப்பட்டு, உமர்கோட் பகுதியில் உள்ள வயதான ஒருவருடன் திருமணம் செய்ய வற்புறுத்தப்பட்டதாக புகார் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சுனிதாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சுனிதா உமர்கோட் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்து மத அமைப்புகள் சட்ட ரீதியாக தலையிட்டு, வழக்கறிஞர் சந்தர் கோலி மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
உமர்கோட் நீதிமன்றம் வழக்கை விசாரித்து, சுனிதா குமாரியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதன்படி சுனிதா மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் சந்தர் கோலி கூறுகையில், “இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. பாகிஸ்தானில் இந்து பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்படுவது வழக்கமானதாகி விட்டது. பெரும்பாலான நேரங்களில் குற்றவாளிகள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து தப்பி விடுகின்றனர். சுனிதா போல் சிலர் மட்டுமே சட்டத்தின் மூலம் மீட்கப்படுகின்றனர்” என தெரிவித்தார். இந்த சம்பவம் பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களை மீண்டும் வெளிச்சம் போட்டு உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?