சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் அமலாக்கத்துறை (ED), இன்று காலை சென்னையில் அதிரடி சோதனைகளை தொடங்கியுள்ளது.
மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வரும் ஒரு முக்கிய தொழிலதிபருடன் தொடர்புடைய இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 5 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

சட்டவிரோத நிதி பரிவர்த்தனை மற்றும் வெளிநாட்டு நாணய முறைகேடுகள் தொடர்பாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கணக்குத் தாள்கள் மற்றும் மின்னணு தரவுகளைப் பரிசோதித்து வருகின்றனர்.

சோதனைக்காக அந்தப் பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் மத்தியில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது. அமலாக்கத்துறையின் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மேலும் சில இடங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் விரிவடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?