தங்கம் விலை சரிவு ... சவரனுக்கு ரூ.800 குறைவு!
Dinamaalai November 04, 2025 04:48 PM

 

சில நாட்களுக்கு முன் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்தைத் தாண்டி விற்பனை செய்யப்பட்ட நிலையில், வியாபாரிகள் விரைவில் ரூ.1 லட்சம் எட்டும் என எதிர்பார்த்தனர். ஆனால், அந்த உயர்வு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த 18-ஆம் தேதி முதல் தங்க விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

வாரத்தின் தொடக்க நாளான நேற்று (திங்கள்), சென்னை சந்தையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,800 என விற்பனையாகி இருந்தது. வெள்ளி விலையும் அதேபோல் சிறு அளவில் உயர்ந்தது. ஆனால் இன்று விலை நிலைமையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100, சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.90,000-க்கும், ஒரு கிராம் ரூ.11,250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், கிலோவுக்கு ரூ.1,65,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.