2025ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு (Indian Cricket Team) மிகவும் சிறப்பாக அமைந்தது. 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, 2026 மார்ச் மாதத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி 2025 பட்டத்தை வென்றது. இது மட்டுமின்றி, சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான இந்திய அணி டி20 ஆசிய கோப்பையையும் வென்றது. தற்போது, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இங்கு இந்தியா ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தநிலையில், தற்போது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தை முடித்த கையோடு இந்தியா வரும் தென்னாப்பிரிக்க அணியோடு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடும். இந்தநிலையில், 2026ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்திய அணியின் அட்டவணை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்தியா – ஆஸ்திரேலிய தொடர்இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இதில், 3 டி20 போட்டிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. முதல் போட்டி கைவிடப்பட்டதால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி வருகின்ற 2025 நவம்பர் 6ம் தேதியும், 5வது போட்டி வருகின்ற 2025 நவம்பர் 8 ஆம் தேதியும் நடைபெறும்.
ALSO READ: 3வது டி20யில் மாஸ் காட்டிய வாஷிங்டன் சுந்தர்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..!
தென்னாப்பிரிக்கா இந்திய சுற்றுப்பயணம்ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான தொடர் நடைபெறவுள்ளது. இதில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெறும்.
டெஸ்ட் தொடர்தென்னாப்பிரிக்காவுக்குப் பிறகு, நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது, பின்னர் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையே 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெறும்.
ஒருநாள் தொடர்பிப்ரவரி 2026 முதல் ஜூன் 2026 வரை இந்தியா டி20 உலகக் கோப்பையில் விளையாடும். இதன் பிறகு, அனைத்து இந்திய வீரர்களும் ஐபிஎல் 2026 சீசனில் விளையாடுவதைக் காணலாம். இதன் பிறகு, இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யும்.
ALSO READ: கிரிக்கெட்டில் மங்கிய வாய்ப்பு.. பயிற்சியாளராக பயணம்.. யார் இந்த அமோல் மஜும்தார்..?
டி20 தொடர்