சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறவுள்ள மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசனுக்கான அட்டவணையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, நடப்பு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் நவம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தந்திரி முன்னிலையில் மூலமந்திரம் கூறி பதவி ஏற்கவுள்ளனர்.

மறுநாள் 17ம்தேதி முதல் புதிய மேல்சாந்திகள் வழிநடத்தும் பூஜைகள் தொடங்கவுள்ளன. மண்டல பூஜை டிசம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பின் நடை மூடப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம்தேதி மீண்டும் திறக்கப்படும்.
மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம்தேதி நடைபெறும். இதைத் தொடர்ந்து ஜனவரி 20ம் தேதி பந்தள ராஜகுடும்ப பிரதிநிதிகள் தரிசனம் செய்த பின் கோவில் நடை அடைக்கப்படும்.

அதன்பின் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12 முதல் 17 வரை, பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14 முதல் 19 வரை கோவில் திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?