தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) அறிவித்துள்ளதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களுக்குப் பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஒரு வருட பணி அனுபவம் கொண்ட, 22 முதல் 45 வயதுக்குள் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். Electrician, Plumber, Mason, Fitter, Painter, Labour போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

மாத வருமானம் — Electrician, Plumber, Mason, Fitter பணிகளுக்கு ரூ.47,250; Painter பணிக்கு ரூ.44,100; Labour பணிக்கு ரூ.29,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமானச் செலவுகள் வேலை வழங்குநரால் ஏற்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் சுயவிவரம் (Resume), கல்வி மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் நகல், புகைப்படம் ஆகியவற்றை 07.11.2025க்குள் [ovemclnm@gmail.com](mailto:ovemclnm@gmail.com) என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

நேர்காணல் 8.11.2025 காலை 8.00 மணி முதல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும்.
மேலும் தகவல்களுக்கு http://www.omcmanpower.tn.gov.in, தொலைபேசி 044-22502267, வாட்ஸ்அப் எண் 9566239685 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?