கிராம்பு, கற்பூரம், ஓமம் சாப்பிட எந்த நோய் கட்டுப்படும் தெரியுமா ?
Top Tamil News November 04, 2025 03:48 PM

பொதுவாக பெரிய பெரிய வியாதி முதல் சிறிய வியாதிகள் வரை நம் சித்த வைத்தியம் குணமாக்கும் .சுகர் , அல்சர் ,பல் ஈறு பிரச்சினை போன்ற நோய்களை நம் இயற்கை வைத்தியம் மூலம் எளிதாக வென்று காமிக்கலாம் .அந்த இயற்கை வைத்தியத்தின் சில பகுதிகளை இந்த பதிவில் பார்க்கலாம் 

1.சிலருக்கு பல் ஈறு வீக்கம் இருக்கும் .அவர்கள் கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
2.சிலருக்கு உடலில் படர் தாமரை இருக்கும் .அவர்கள் அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
3.சிலருக்கு அடிக்கடி மயக்கம் வரும் .அவர்கள் ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
4.சில பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் சோர்வு இருக்கும் .அவர்கள் கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.
5.சில ஆண்களுக்கு மலட்டு தன்மையிருக்கும் .அவர்கள் தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வர ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
6.சிலருக்கு நரம்பு தளர்ச்சியிருக்கும் .அவர்கள் அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
7.சில குழந்தைகளுக்கு இருமல் இருக்கும் .வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.
8.சிலரின் பல்லில் புழு இருக்கும் .பல்லில் புழுக்கள் நீங்க சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.
9.சிலருக்கு அல்சர் இருக்கும் .சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். 
10.சிலருக்கு சுகர் இருக்கும் .அந்த சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.