
கடந்த சில மாதங்களாக விலை உயர்ந்து வந்த தங்கம், சமீபமாக விலை குறைந்து வரும் நிலையில் இன்று நேற்றைய விலையை விட மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த அக்டோபர் 21 ல் புதிய உச்சமாக ரூ.96 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை பின்னர் வேகமாக சரியத் தொடங்கியது. கடந்த அக்டோபர் 28 அன்று என்றும் இல்லாத அளவு சவரன் ரூ.88,600 குறைந்தது 22 காரட் ஆபரண தங்கம். பின்னர் விலை உயர்ந்து ரூ.90 ஆயிரத்திற்கும் அதிகமாகவே விற்பனையாகி வந்தது.
நேற்று 22 காரட் சவரன் ரூ.90,800க்கு விற்ற தங்கம் இன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.11,250 க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் தொடர்ந்து விலை குறைந்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெள்ளி விலை தங்கத்தை விட வேகமாக குறைந்து வருகிறது. நேற்று கிராம் ரூ.168 விற்ற வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து கிராம் ரூ.165 ஆக விற்பனையாகி வருகிறது.
Edit by Prasanth.K