மதுரை வளர் நகர் அருகே ராம் நகரில் உள்ள வீட்டில் வனச்சரகர் வெனிஸ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது, யானை தந்தத்துடன் பதுங்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் (43), சுதாகர் (52), ரகுநாத் (51), சுப்ரமணி (52) மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணிக்கராயர் (39) என தெரியவந்தது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: தேனி மாவட்டம், போடியை சேர்ந்த ஜமீன் குடும்ப வாரிசான வடமலை ராஜபாண்டியன் (ஏ) ரமேஷ் பாண்டியன், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு வந்தபோது, அங்கு கோயில் அர்ச்சகர் சுதாகர் மற்றும் கேண்டீனில் பணிபுரியும் ரகுநாத் ஆகியோருடன் தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் 1.6 மீட்டர் நீளமுள்ள, 26 கிலோ எடையுள்ள யானை தந்தத்தை விற்றுத் தருவதாக கூறியதன் பேரில், அவரது நேர்முக உதவியாளர் ரமேஷ் தந்தத்துடன் மதுரைக்கு கொண்டு வந்து அவர்கள் கையிலே கொடுத்துள்ளார். இந்த தகவல் பெற்று உடனடியாக ரமேஷை கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தத்தின் சந்தை மதிப்பு ரூ.6 கோடியாகும். இது தலைமறைவாகிய ஜமீன் ரமேஷ் பாண்டியனின் சொந்தமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வனச்சட்டப்படி யானை தந்தம் மற்றும் புலி நகைகள் போன்றவற்றை வைத்திருப்பது சட்டவிரோதமாக இருப்பதால், போலீசார் ஜமீன் வாரிசைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?