ICC Women's Cricket World Cup 
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நேற்றைய தினம் (நவம்பர் 2) 13வது ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. நம் பெண்களின் வெற்றிக்கு நாடு முழுவதுமிருந்து உணர்வுப்பூர்வமான வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.
5 தசாப்த மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் சிலமுறை கோப்பைக்கு மிக அருகில் சென்றும் வெற்றியைத் தவறவிட்ட இந்திய அணிக்கு நேற்றைய வெற்றி வரலாற்று வெற்றியாகும்.
 India Wins World Cup 
1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக உலகக் கோப்பை வென்றது நாடு முழுவதும் இளைஞர்கள் நம்பிக்கையோடு கிரிக்கெட் மட்டையை ஏந்த செய்ததைப் போன்று இந்த உலகக் கோப்பை இந்திய பெண்களுக்கு உத்வேகமாக இருக்கும் என பிரபலங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மகளிர் அணியை வாழ்த்திய ரஜினிகாந்த், "இந்தியாவுக்கு என்னவொரு மதிப்புமிக்க தருணம்! நம் நீலப்பெண்கள் தைரியம், நேர்த்தி மற்றும் சக்தியை மறுவரையறை செய்து வருங்காலத் தலைமுறையினருக்கு ஊக்கமளித்துள்ளனர். உங்கள் அச்சமற்ற, உடைக்க முடியாத உள்ளத்துடன் மூவர்ணத்தை உலகம் முழுவதும் எடுத்துச் சென்றுள்ளீர்கள். வாழ்த்துகள்! வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்!" என சமூக வலைத்தளத்தில் பெருமிதத்தோடு பகிர்ந்திருக்கிறார்.
மேலும் பல பிரபலங்கள் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரை வாழ்த்தியுள்ளனர்.