
மழைக்காலம் அல்லது குளிர்காலத்தில் முகம் வறண்டு, முகப்பரு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவது சிறந்தது; குளிர்ந்த நீர் அல்லது சூடான நீர் சருமத்தை பாதிக்கக்கூடும். முகம் கழுவிய உடனே மாய்ஸரைசரை தடவுவது அவசியம். ரசாயனங்கள் அதிகம் உள்ள அழகு சாதனப் பொருட்களை தவிர்த்து, இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும். இரவு படுக்கும் முன் மேக்கப்பை நீக்கி, மாய்ஸரைசர் அல்லது எண்ணெய் தடவுவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சத்தான உணவுகள், போதுமான தண்ணீர், மற்றும் நீர் நிறைந்த ஆகாரங்களை உட்கொள்வது முக்கியம். முகத்தை துடைக்கும் போது அழுத்தமாக அல்லாது மெதுவாக துடைக்க வேண்டும். சருமம் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்கும்படி பராமரிப்பது குளிர்காலத்தில் மென்மையான மற்றும் பிரகாசமான தோற்றத்தை வழங்கும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!