வைல்ட்கார்ட் போட்டியாளர்களை எதிர்க்கும் பார்வதி.. வீட்டின் தலைவியாக திவ்யா போடும் மாஸ்டர் பிளான்!
TV9 Tamil News November 04, 2025 03:48 AM

இதை மக்களிடையே மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதல் முதலில் கடந்த 2006ம் ஆண்டில் இந்தி மொழியில் தொடங்கியிருந்தது. அதன்படி கடந்த 2017ம் ஆனது முதல் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த 2025ம் ஆண்டில் பிக்பாஸ் சீசன் 9 தமிழ் (Bigg Boss Season 9 Tamil) நிகழ்ச்சியின் நடைபெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுத்து வருகிறார். கடந்தஹ் 2025ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், சுமார் 29 நாளாக இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பமான நிலையில், 4 போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டிருந்தனர்.

அதை தொடந்து 4வது வாரத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக (Wild card contenders) திவ்யா கணேஷ், பிரஜன், சாண்டரா, அமித் போன்ற 4 பேர் உள்ளே நுழைந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இணைந்து முதல் நாள் ஆகியிருக்கும் நிலையில், இன்று வெளியான 2 புரோமோக்களும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இதையும் படிங்க :கோவாவில் ஜெயிலர் 2 ஷூட்டிங் ஓவர்.. சென்னை திரும்பிய ரஜினிகாந்த்!

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் 29-வது நாளின் முதல் ப்ரோமோ வீடியோ :

#Day29 #Promo1 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/ARsJXXisZc

— Vijay Television (@vijaytelevision)

இந்த முதல் ப்ரோமோவில் விஜே பார்வதி, வைல்ட் கார்ட் போட்டியாளர்களை அவமதிக்கும் விதத்தில் பேசுவதுபோல இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் நுழைந்த முதல் நாளிலே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. உள்ளே நுழைந்து, மற்ற போட்டியாளர்களை வாட்டி வைத்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் செய்ததற்கு பழித் தீர்க்கும் விதத்தில் விஜே பார்வதி இன்று அவர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : நான் நிஜத்தில் இப்படித்தான்.. எனக்கு முன் கோபம் ஜாஸ்தி – அஜித் குமார் பகிர்ந்த விஷயம்!

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் 29-வது நாளின் 2வது ப்ரோமோ வீடியோ :

#Day29 #Promo2 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/cfFT6MnTAb

— Vijay Television (@vijaytelevision)

இந்த 2வது ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டின் இந்தவார தலைவராக திவ்யா கணேஷ் இருக்கிறார். இந்நிலையில் அவர் விதிக்கும் கட்டுப்பாட்டிற்கு வியானா எதிர்க்கும் வகையில் பேசியிருந்தார். அதற்கு அவர் பதில் பேசும் வித்தை இந்த ப்ரோமோ உள்ளது. மேலும் திவ்யா கணேஷ் மற்ற போட்டியாளர்களுடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தவார வீட்டின் தலைவராக திவ்யா கணேஷ் போடும் மாஸ்டர் பிளான் தொடர்பான ப்ரோமோ வைரலாகிவருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.