தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அருண் (18) என்ற கல்லூரி மாணவர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களில் ஆர்வமுடன் ஈடுபட்டு வந்தார். அவருடன் 14 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் இணைந்து சமூக வலைதளத்திற்காக பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அதிக லைக்குகள் மற்றும் வியூஸ் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், வித்தியாசமான வீடியோ ஒன்றை எடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி, மூவரும் தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்துக்கு சென்று அங்கு நின்றிருந்த சரக்கு ரயிலின் மேல் ஏறி ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்டிருந்த செல்போன் கையில் இருந்து உயர் மின்னழுத்த மின்கம்பியைத் தொட்டதால், மின்சாரம் தாக்கி மூவரும் கீழே தூக்கி வீசப்பட்டனர். இதில் மாணவர் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்ற இரண்டு சிறுவர்கள் பலத்த காயங்களுடன் உடனடியாக மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தையும், இளைஞர்களில் பாதுகாப்பு விழிப்புணர்வு தேவை என்பதையும் நினைவூட்டியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!