சென்னையில் நடைபெற்ற மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தோனேஷிய வீராங்கனை ஜேனிஸ் டிஜென் அபார ஆட்டத்துடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கிய சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று நிறைவுற்றன. அரையிறுதியில் தாய்லாந்தின் லன்லாலாவை வீழ்த்தி ஜேனிஸ் டிஜென் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிரெல், சீன தைபேவை சேர்ந்த ஜோனா கார்லேண்டை வீழ்த்தி இறுதிக்கு வந்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜேனிஸ் டிஜென், கிம்பெர்லி பிரெலை 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜேனிஸ் டிஜென் சென்னை ஓபன் 2025 மகளிர் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.
சாம்பியனான ஜேனிஸ் டிஜென் ரூ.32 லட்சம் பரிசுத்தொகையும், 250 டபிள்யூடிஏ புள்ளிகளும் பெற்றார். இரண்டாம் இடத்தை பிடித்த கிம்பெர்லி பிரெலுக்கு ரூ.10.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.இந்த வெற்றியால் ஜேனிஸ் டிஜென் தனது சர்வதேச தரவரிசையில் உயர வாய்ப்பு பெற்றிருப்பதாக டென்னிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!