
பீகாரிலிருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசியது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தீய செயலை தேர்தல் ஆணையம் செய்கிறது. பீகாரில் இதை செயல்படுத்தியபோது அதை முதலில் எதிர்த்தது தமிழகம்தான். ஆனால் தமிழகம் பீகார் மக்களை வஞ்சிப்பதாக பிரதமர் மோடி தனது பேச்சின் மூலம் வன்மத்தை காட்டியுள்ளார். பீகாரில் பேசிய பிரதமர் மோடிக்கு அந்த கருத்தை தமிழ்நாட்டில் பேச தைரியம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.
Edit by Prasanth.K