பொதுவாக ராகி என்றழைக்கப்படும் கேழ்வரகில் நம் உடலுக்கு நிறைய ஆரோக்கிய நன்மை அடங்கியுள்ளது .இந்த ராகியை எந்த வடிவத்தில் சாப்பிட்டால் நமக்கு என்ன நன்மை உண்டாகும் என்று இந்த பதிவில் பாக்கலாம்
1.கேழ்வரகு என்றழைக்கப்படும் ராகி நார்ச்சத்து நிறைந்த தானியமாகும்.
2. இந்த ராகியில் உள்ள நார்ச்சத்தை நாம் உட்கொள்வதால் வயிறு நிறைந்த உணர்வு நீண்ட நேரம் நீடிக்கும்.
3.ராகியில் உள்ள நார்ச்சத்து காரணமாக, உங்களுக்கு விரைவாக பசி ஏற்படாது. இதனால் கன்னாபின்னாவென்று எதையும் சாப்பிடுவதும் தவிர்க்கப்பதால் எடை அதிகரிக்காது .
4.ராகியில் உள்ள புரதம் தசையை உருவாக்குகிறது.
5.ராகியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் கொழுப்பு எரிக்கப்படும்
. 6.ஏனெனில் வலுவான தசைகள் அதிக கொழுப்பை எரிக்க உதவுகின்றன.
7.இருப்பினும், உடல் எடையை குறைக்க விரும்புவோர், தாங்கள் உட்கொள்ள வேண்டிய ராகியின் அளவை உணவு நிபுணரிடம் ஆலோசிக்கவும்.
8.ராகியை எந்த வடிவில் சாப்பிட்டாலும், உடலில் இரத்த சர்க்கரை அளவு சீராக இருந்து சுகர் அளவு உயராது
9.மேலும் இந்த ராகி விரைவாக பசியை ஏற்படுத்தாது. இதனால் எடை அதிகரிப்பு பிரச்சனையை நீங்கள் தவிர்க்கலாம்