தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய் தலைமையில், கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (நவம்பர் 5) காலை 10 மணிக்குச் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன.
மேலும், இந்தக் கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, இறுதியாக விஜய் உரையாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க, அழைப்பிதழ் மற்றும் கட்சியின் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.