அதிகாலை 3.30 மணி வரை மாறி மாறி பாலியல் வன்கொடுமை... கோவையில் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
Dinamaalai November 05, 2025 04:48 PM

கோவையில் உயர்கல்வி பயிலும் 21 வயது மாணவி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானநிலையம் பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், தாக்குதலுக்கு உள்ளான மாணவியின் நண்பர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காவல்துறை தெரிவித்த தகவலின்படி, முன்தின இரவு மாணவி தனது நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த போது, ஆயுதங்களுடன் வந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆண் நண்பரை காயப்படுத்தி விட்டு, மாணவியை பலவந்தமாக இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக தகவல் தெரிவித்த பொதுமக்களின் உதவியுடன் போலீசார் விசாரணையில் இறங்கியதுடன், அதிகாலை 4 மணியளவில் மாணவியை மீட்டனர். அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இரவு 11.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை மாணவியை பலமுறை  மாறி மாறி வன்கொடுமை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. 

சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவரை போலீசார் துரத்திச் சென்றபோது, மோதலில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் ஆயுதங்களும், வாகனமும் மீட்கப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாணவியை மிரட்டி, சம்பவத்தை நகைத்திருட்டு என கூறும்படி குற்றவாளிகள் முயன்றதாகவும், திருடப்பட்ட ஆபரணங்களில் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் கோவை முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.