'இந்தியாவுக்கு” பெருமை..! டிரம்ப் மிரட்டலுக்கு மத்தியில் வெற்றி: நியூயார்க் மேயர் ஜோஹ்ரான் மம்தானி உரையில் நேருவின் 'அரிய தருணம்' மேற்கோள்..!!!
SeithiSolai Tamil November 05, 2025 05:48 PM

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி (Jahran Mamdani), குடியரசுக் கட்சி வேட்பாளரான கர்டிஸ் ஸ்லிவாவை வீழ்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், நியூயார்க் நகர மேயர் தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் அந்த நகரத்துக்ககு குறைந்தபட்ச நிதியைத் தவிர, மீதமுள்ள நிதியை நான் நிறுத்துவேன் என்ற டிரம்பின் மிரட்டலுக்கு மத்தியிலும், இந்திய வம்சாவளியை சேர்ந்த மம்தானி நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க் நகரின் முதல் இஸ்லாமிய மற்றும் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையைப் பெற்ற மம்தானி, தனது வெற்றி உரையில் ஒரு சுவாரஸ்யமான செயலைச் செய்தார். இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு நேரு பேசிய, “வரலாற்றில் அரிதாகவே வரும் ஒரு தருணம் வருகிறது. நாம் பழையதிலிருந்து புதியதற்கு அடியெடுத்து வைக்கும் போது, ஒரு யுகம் முடிவடையும் போது, நீண்ட காலமாக அடக்கப்பட்ட ஒரு தேசத்தின் ஆன்மா வெளிப்படும் போது…” என்ற உரையை மேற்கோள் காட்டி மம்தானி பேசினார். இந்தியர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.