“சாக்லேட் பாய்” துல்கர் சல்மானுக்கு வந்த சோதனை.. ” பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக் குறைவு- திரையுலகில் பரபரப்பு..!!!
SeithiSolai Tamil November 05, 2025 07:48 PM

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகரும், கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரியாணி அரிசி நிறுவனத்தின் விளம்பரத் தூதுவருமான (Brand Ambassador) துல்கர் சல்மானுக்கு எதிராக, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனத்தின் மனுவில், “சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக, விளம்பரம் செய்யப்பட்ட அந்தப் பிரசித்தி பெற்ற அரிசி நிறுவனத்தின் பிரியாணி அரிசியைப் பயன்படுத்தி பிரியாணி சமைக்கப்பட்டது. அந்தப் பிரியாணியைச் சாப்பிட்ட பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது” என்று கடுமையான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவுக்குக் காரணமான அந்த அரிசி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் விளம்பரத் தூதரான நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டரிங் நிறுவனம் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளது.

இந்த மனுவைப் பரிசீலனை செய்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், இது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காக, அரிசி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் வரும் டிசம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தச் சம்பவம், திரையுலகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.