மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கும் முன் கரூரில் நடைபெற்ற துயரச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது, வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுக்க கட்சித் தலைவர் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகும். மேலும், கரூரில் தவெக பிரசாரத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து திமுக அரசை கட்சி கடுமையாக கண்டித்தது. சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.

அதேபோல், தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து மழை வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தவெக வலியுறுத்தியது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தன்னிச்சையாகப் போட்டியிடும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!