பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா தியாம கொண்டலு பகுதியைச் சேர்ந்த சுதீந்திரா (36) என்பவர் பிரபல நடனக் கலைஞர் ஆவார். கன்னட தொலைக்காட்சிகளில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன், தாபஸ்பேட்டையில் நடனப் பயிற்சி மையம் நடத்தி வந்தார். 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் இவரிடம் பயிற்சி பெற்று வந்தனர். அதோடு அலங்காரம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், சுதீந்திரா இரண்டு நாட்களுக்கு முன் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். நேற்று காலை அந்த காரில் பெங்களூரு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, பொம்மனஹள்ளி அருகே கார் திடீரென பழுதானது. காரை சாலையோரம் நிறுத்தி சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, அதே சாலையில் வந்த லாரி அவரது கார் மீது மோதியது. இதில் சுதீந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் கிடைத்ததும் தாபஸ்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, லாரி டிரைவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. புதிய கார் வாங்கிய மறுநாளே உயிரிழந்த சுதீந்திராவின் மரணம், அவரை அறிந்தவர்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!