பொதுவாக பழங்கள் நமக்கு நல்லது செய்யும் என்றாலும் அவற்றை தவறான நேரத்தில் உண்டால் ஆரோக்கிய கேடு உண்டாகும் இந்த ப்பதிவில் எந்த பழத்தை எந்த நேரத்தில் உண்டால் என்ன பாதிப்பு வருமென்று நாம் பார்க்கலாம்
1.வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்து,ஆரோக்கிய கேடு உண்டாகும்
2.அடுத்து எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களையும் வெறும் வயிற்றில் உண்ண கூடாது .இந்த சிட்ரஸ் பழங்கள் , அமிலச் சுரப்பை அதிகப்படுத்தி நெஞ்சு எரிச்சலையும் குடல் புண்ணையும் உண்டாக்கிவிடும்.
3.எப்போதுமே தக்காளியை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
4.மேலும் காலையில் பச்சை காய்கறிகளால் ‘சாலட்’ தயாரித்துச் சாப்பிட , இதன் அமிலங்கள் நெஞ்செரிச்சலை உண்டாக்கும்; சில நேரங்களில் அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.
5.மேலும் அதிகம் காரமான உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.
6.ஏனெனில் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து கடுமையான எரிச்சலை ஏற்படுத்தி விடும். 7.வெறும் வயிற்றில் காரம் சாப்பிட செரிமான கோளாறுகளும் உண்டாகக்கூடும்.
8.சோடா உள்ளிட்ட குளிர்பானங்களையும் வெறும் வயிற்றில் பருக,அது வயிற்று பகுதிக்கு செல்லும் ரத்தத்தின் அளவை குறைத்து ஆரோக்கிய கேடு உண்டாகும்
9. மேலும் குளிர்பானம் குடிப்பதால் உணவு செரிமானம் ஆவதற்கு தாமதமாகும். குளிர்பானங்களை பருகாமல் இருப்பது நல்லது.
10.காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன் மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். இம்மியூனிட்டி பவர் அதிகரிக்கும்
.