ஜலதோஷம் வராமல் எப்படி தடுக்கலாம்ணு தெரிஞ்சிக்கோங்க
Top Tamil News November 05, 2025 11:48 AM

பொதுவாக நம் உடலில் பருவகாலம் மாறும்போது நோய் தொற்று உண்டாகும் .இந்த நோய் தொற்றிடமிருந்து நம்மை காக்க சத்தான உணவு பொருட்களை உண்பது அவசியம் .எனவே இந்த பதிவில் பருவ கால நோயிடமிருந்து எப்படி தப்பலாம் என்று பார்க்கலாம் 

1.சிலர் உணவு தட்டில் பல வண்ணங்களில் உணவு இருப்பதை பார்த்திருப்பீர்கள் .உங்கள் உணவில் வானவில்லின் அனைத்து வண்ணங்களும் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 
2.உங்கள் உணவில் உள்ள அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளையும் சேர்த்து, அவை பல விட்டமின்களை அள்ளி கொடுக்கிறது 
3.பொதுவாக நாம் கீரை, குடைமிளகாய் போன்ற பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவது எப்போதும் ஒரு ப்ளஸ் பாயிண்டாக கருதப்படுகிறது. . 
4.ஆரோக்கிய வாழ்வுக்கு உங்கள் மனதை மட்டுமன்றி உடலையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 
5.பொதுவாக சளி பிடிப்பது ,ஜலதோஷம் போன்ற வைரஸ் தொற்றுகள் மிகவும் வெளியில் இருந்துதான் உடலுக்குள் நுழையும்.  
6.எனவே பருவகால நோய் தொற்று காலங்களில் நல்ல சுகாதாரத்தை நாம் மேக்கொள்ள வேண்டும் 
7.நோய் தொற்றை தடுக்க உங்கள் கைகளை தொடர்ந்து கழுவவும், 
8..நோய் தொற்றை தடுக்க தினமும் குளியுங்கள். காய்ச்சல் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்கவும்.
9..நோய் தொற்றை தடுக்க தினமும் சமையலில் மிளகு சேர்த்துக்கொள்ளலாம். 
10.ஆம்லெட் போட்டு சாப்பிடும் போது, ரசம் வைக்கும் போது, தினமும் குழம்பு வைக்கும் போது என எப்போது என்ன சாப்பிட்டாலும் அதனுடன் மிளகு சேர்த்துக்கொள்வது ஆரோக்கியம் தரும்  
11.அப்படி உங்களுக்கு சளி பாதிப்பு எற்படுவது போன்ற உணர்வு இருந்தால் யோசிக்காமல் இரண்டு மிளகை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு ,சுடுதண்ணீர் பருகினால் போதும் .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.