இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிநோயாளி சேவைகள் நிறுத்தம்... நிர்வாகம் அறிவிப்பு!
Dinamaalai November 05, 2025 01:48 PM

இன்று நவம்பர் 5ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிநோயாளி (OP) பிரிவு இயங்காது என நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவசர நேரத்தில் நேரில் சென்று அவஸ்தையில் சிக்காதீங்க. உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இது குறித்த தகவலை சொல்லிடுங்க. 

இது தொடர்பாக புதுவை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இன்று நவம்பர் 5ம் தேதி மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.

நவம்பர் 5ம் தேதி மருத்துவ ஆலோசனைக்காக நோயாளிகள் வருவதைக் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆனால் அவசரப் பிரிவு மற்றும் 24 மணி நேர சேவைகள் வழக்கம் போல் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அன்றைய தினம் மருத்துவ ஆலோசனை பெற திட்டமிட்டிருந்த நோயாளிகள் தங்களது வருகையை மாற்றிக் கொள்ளுமாறு ஜிப்மர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.