'ஆத்திச்சூடியே தெரியாதவர் விஜய்!' – 'காகிதக் கப்பலில் கடல் தாண்டுகிறார்!' – மாமல்லபுரம் கூட்டத்தால் வைகோவின் ஆவேச தாக்குதல்!
SeithiSolai Tamil November 06, 2025 05:48 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை குறித்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஒரு கடுமையான கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் வைகோவின் முக்கியக் கருத்துகள்:

  • பொது வாழ்வில் ‘ஆத்திச்சூடியே ‘ அறியாதவர் விஜய்.
  • சமீபத்தில் நடந்த கரூர் கொடுந்துயருக்கு (கூட்ட நெரிசலில் பலியான 41 பேர்) முழுக் காரணமானவர் விஜய் தான் என்றும், ஆனால் அவர் பொறுப்பற்றுப் பேசி திசை திருப்புகிறார் என்றும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
  • நடந்த சம்பவத்திற்கு துளியளவும் வருத்தப்படாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் உள்ளார் விஜய்.
  • விஜய் ‘காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார்’ என்றும், ‘ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்’ என்றும் வைகோ கிண்டலடித்துள்ளார். மேலும், அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும் என்றும் விமர்சித்துள்ளார்.
  • தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளிநகையாட முனைகிறார் என்றும், முதலமைச்சர் மீது வெறுப்பையும், கசப்பையும் கொட்டித் தீர்த்திருக்கிறார் என்றும் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
  • விஜய்யின் இந்த நிலைமை அனுதாபத்திற்கும், பரிதாபத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.
  • விஜய் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.