இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட மகளிர் பிரீமியர் லீக், 2023ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூன்றாவது சீசன் இவ்வருடம் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நான்காவது சீசனை முன்னிட்டு அணிகள் தங்களது அணிகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், முன்னாள் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது தலைமைப் பயிற்சியாளரை மாற்றியுள்ளது.
புதிய தலைமைப் பயிற்சியாளராக தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மலோலன் ரங்கராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஆர்சிபி அணியுடன் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக மகளிர் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!