சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. அப்படி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி (Bigg Boss Tamil Season 9) கடந்த 5-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து அறியவும் இந்த சீசனில் நிகழ்ச்சி குழு என்ன என்ன மாற்றங்கள் எல்லாம் செய்துள்ளது என்பதை அறியவும் பிக்பாஸ் ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் வைத்து இருந்த ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தையே சந்தித்தது என்று ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே எல்லா சீசன்களிலும் போட்டியாளர்களிடையே சண்டைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே சண்டையை தவிற வேற எதுவும் இல்லை. சண்டை மட்டும் இல்லாமல் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் விதமாகவும் இந்த சீசனில் உள்ள போட்டியாளர்கள் நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசினாலும் போட்டியாளர்கள் அதனை சற்றும் யோசிக்காமல் அவர்கள் என்ன செய்தார்களோ அதையே செய்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
திவ்யாவிற்கு எதிராக திரும்பும் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்:இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த உடனே மற்ற அனைவரும் அவர்களுக்கு எதிராக யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். அதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் தலையாக உள்ள திவ்யாவை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். நேற்று துஷார் திவ்யாவிடம் சண்டையிட்ட நிலையில் இன்று திவ்யாவிடம் சபரி சண்டையிடும் வீடியோ தற்போது வெளியாகி வருகிறது. இது தொடர்ந்து ரசிகர்களிடையே எரிச்சலை மூட்டும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… நவம்பர் 21-ம் தேதி வெளியாகும் தீயவர் குலை நடுங்க படம் – அப்டேட் இதோ
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:#Day32 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/A6sRgV9gw4
— Vijay Television (@vijaytelevision)
Also Read… மலையாள சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தோட்டம்… வைரலாகும் டைட்டில் டீசர் வீடியோ