சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுக்கும் இடையே நடக்கும் விவகாரம், ரங்கராஜ் தனது திருமண ஒப்புதலை மறுத்த மறுநாளே, ஜாய் வெளியிட்ட ஒரு தனிப்பட்ட வீடியோவால் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
அந்த வீடியோவில் ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவைப் பாராட்டிப் பேசுவதுடன், கேமராவைப் பார்த்துக் ‘முத்தம் ‘ (Kiss) கொடுப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தனது குழந்தைக்கு ரங்கராஜ்தான் தந்தை என்று ஜாய் கிரிசில்டா வலியுறுத்தி வரும் நிலையில், நவம்பர் 5-ஆம் தேதி மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பொது அறிக்கை வெளியிட்டார். அதில், ஜாயின் குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை’ என்று மறுத்ததுடன், தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக ஜாய் கிரிசில்டா தன்னைப் பிளாக்மெயில் செய்ததாகக் கூறி, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் ஏற்கனவே புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், குழந்தை பராமரிப்பிற்காக மாதந்தோறும் ₹1.5 லட்சமும், தனது BMW காருக்கான EMI-யாக ₹1.25 லட்சமும் ஜாய் கிரிசில்டா கேட்டதாகவும், அதைத் தான் மறுத்துவிட்டதாகவும் ரங்கராஜ் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
“>
சட்டப்படி தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் இன்னும் திருமண உறவில் இருக்கும் ரங்கராஜ், குழந்தைக்கு DNA பரிசோதனை செய்யக் கோரியுள்ளதுடன், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே முழுப் பொறுப்பையும் ஏற்பதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த வழக்கில் மகளிர் ஆணையம் அளித்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் ரங்கராஜ் கூறியிருந்தார். இந்நிலையில், ஜாய் கிரிசில்டாவும் தனது பிறந்த குழந்தைக்கு நீதி கேட்டு தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதால், தனிப்பட்ட தகவல்கள், ஏமாற்றுதல் குற்றச்சாட்டுகள், பராமரிப்புச் செலவுக் கோரிக்கை, மற்றும் கசிந்த அந்தரங்க வீடியோக்கள் என இந்தச் சர்ச்சை, நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.